கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உதவியாளருக்கும், டிரைவருக்கும் கரோனா!  

 Corona for KD Rajendrapalaji's assistant and driver!

சில நாட்களுக்கு முன்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சென்னை வீட்டில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்குரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவர்களில், அமைச்சரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சென்னை டிரைவர் கோபிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் – கோபி நட்பில், உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுமாம். அதனாலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள், அவர்களது நட்பு வட்டத்தில்.

இரண்டு வாரங்களுக்கு முன், உடல் அசதியில் இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, சிவகாசியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ‘நெகடிவ்’ ரிசல்ட் வந்தபிறகே ‘கூல்’ ஆனார். தற்போது, தனது நேர்முக உதவியாளருக்கும், கார் டிரைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட, தற்போது மீண்டும்‘ஷாக்’ ஆகியிருக்கிறார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் பீதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

admk corona virus rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe