'Corona' for Kanchipuram collector

Advertisment

தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கரோனாகண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதனால் இதுவரை குணமடைந்தவர்களின்எண்ணிக்கை1,02,310 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்மக்கள் களப்பணியாளர்களானகாவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு அதிகாரிகள், அமைச்சர்களுக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.