Advertisment

டெல்டாவில் அதிகரிக்கும் கரோனா!

corona

திருச்சியை சுற்றி உள்ள டெல்டா மாவட்டங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 100க்கு அதிகமான கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மணப்பாறை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு உள்ள அனைத்து போலீசாருக்கு கரோனா பரிசோதனை நடந்தப்பட்டது. இதில் மேலும் 3 போலீசாருக்கு கரோனா தொற்று உறுதியானது.

Advertisment

இதேபோன்று முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியார்கள் 50 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் 3 நாட்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது. திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் உள்ள போக்குவரத்து பிரிவு அலுவலத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு கரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை கறம்பக்குடி தபால்நிலைய அலுவலர், ஆவுடையார் கோவில் தனிப்பிரிவு காவலர், புதுப்பட்டியை சேர்ந்த கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேருக்கு கரோனோ தொற்று உறுதியானது. தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது, இதனால்மார்க்கெட்மூடப்பட்டது. திருச்சியில் இன்று 99 பேர், திருவாரூர் 19, கரூர் 5, தஞ்சை 29, புதுக்கோட்டை 56, பெரம்பலூர் – 1, அரியலூர் 29, என டெல்டாவில் மட்டும் 269 பேர் ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டது.

கரோனா தொற்றினால் பலியானவர்கள் எண்ணிக்கை 34 பேர். இதனால் கரோனா தொற்றைதடுப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் அலுவலர்கள். திருச்சியை பொறுத்த வரையில், சில முக்கியமான வீதிகள் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு ஞாயிறு மட்டும் என்றுஇல்லாமல் சனிக்கிழமையும் சேர்த்து நடத்தலாமா என்கிற ரீதியில் அதிகாரிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

corona virus delta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe