Officer

Advertisment

திருவள்ளூர் அருகே, கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சகுந்தலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சகுந்தலா. வயது(52). மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட இவருக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிகிச்சைக்காக சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சகுந்தலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே கடந்த மாதம் இதே போன்று கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், கரோனா நோய் தொற்று காரணமாக உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு அதிகாரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.