/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajaji323232.jpg)
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்மேடு பகுதி அருகே எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளளார். முன்னிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா மற்றும் தனது தம்பிகளுடன் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக, அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜோதிகா மற்றும் ரித்தீஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)