Corona infection confirmed for Vaiko!

Advertisment

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கரோனா பரவல் சில வாரங்களாக தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகமாகவே வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனாதொற்று உறுதியானதால் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் வைகோ.