
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகிமீண்டும் குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இயக்குநர் மணிரத்னம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளது.
Follow Us