Advertisment

நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று உறுதி!

Corona infection confirmed for actor Ramarajan

நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாஎண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 5,560பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46,610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்றுதற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் ராமராஜன் 'கரகாட்டகாரன்', 'எங்கள் ஊரு பாட்டுக்காரன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். கரோனா உறுதிசெய்யப்பட்ட அவர், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நடிகர் ராமராஜன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

corona virus ramarajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe