ADVERTISEMENT

நடிகர் அர்ஜூனுக்கு கரோனா தொற்று உறுதி!

08:30 AM Dec 14, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் அர்ஜூனுக்கு தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த கரோனா தொற்று தற்போது குறைந்துவருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை சீராக இருந்துகொண்டேவருகிறது, கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே தொற்று இருந்துவருகிறதே தவிர, முழுவதுமாக குறைக்க இயலவில்லை. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவார சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜூனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT