Advertisment

1,800-ஐ நெருங்கிய ஒருநாள் கரோனா தொற்று! 

 Corona infection close to 1,800!

Advertisment

தமிழகத்தில் பரவலாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாகச் சற்று அதிகரித்துப் பதிவாகி வந்த நிலையில் பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என நேற்று தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1,484பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1,827 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை8,970இருந்து10,033ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும்632பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-316 பேருக்கும், கோவை-85, குமரி-65,திருவள்ளூர்-134, காஞ்சிபுரம்-57, திருச்சி-47 பேருக்கு என கரோனா பதிவாகியுள்ளது.

Medical TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe