நடிகர் செந்திலுக்கு கரோனா தொற்று! 

Corona infection in actor Senthil!

தமிழகத்தில் கரோனாமீண்டும் பரவிவரும் நிலையில்,திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமேஅனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்டபல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்திலுக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் செந்தில் அண்மையில் பாஜகவில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor coronavirus senthil
இதையும் படியுங்கள்
Subscribe