தமிழகத்தில் கரோனாமீண்டும் பரவிவரும் நிலையில்,திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமேஅனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்டபல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகர் அதர்வாவிற்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.