Skip to main content

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்ளிட்ட 591 பேருக்கு கரோனா தொற்று!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Corona infection in 591 people including AIADMK MLA yesterday!

 

 

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று புதிதாக 591 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,172 ஆக அதிகரித்துள்ளது.

 

நேற்று தொற்று உறுதியானவர்களில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை சட்டமன்ற தொகுதி  உறுப்பினருமான பாஸ்கரும் ஒருவர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைகாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

புதுச்சேரியில் இதற்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா உறுதி தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினார்.  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவாவுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1801 பேர் மருத்துவமனைகளிலும், 3417 பேருக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை புதுச்சேரியில் தொற்றால் பாதிக்கப்பட்ட 780 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 10674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்