ADVERTISEMENT

தனியார் லாட்ஜில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று!!!

05:19 PM May 09, 2020 | kalaimohan


கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தனியார் விடுதி மற்றும் லாட்ஜ்களில் தங்கியிருந்து பூட்டு, பெல்ட், துணி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதனை தொடர்ந்து சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்த 4 வடமாநில தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனையறிந்த நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்து தனிமைப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களுடன் தங்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நோய் தொற்று பரிசோதனை செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT