ADVERTISEMENT

கரோனா தொற்று... 24 மணி நேர அலைபேசி மனநல ஆலோசனை மையம்

11:13 PM Mar 26, 2020 | kalaimohan


சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகவும் காரணமாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்நது கொண்டே போகிறது. இந்தியாவிலும் பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. இதனால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவிக் கொண்டிப்பதால் மக்களிடமும் வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவம், சுகாதாரப் பணியாளர்கள், தன்னலம் கருதாமல் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எப்போதும் தூய்மையாக வைத்துள்ள பணியாளர்கள், எல்லோருக்குமாக முழுநேரமும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் என கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவரின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களின் சந்தேகங்களை போக்கவும் தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் அலைபேசி மனநல ஆலோசனை திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டத்தில் பயனடைய சந்தேகங்களை கேட்க 94 86 76 06 76, 94 94 12 12 97 என்ற அலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர். இதனால் மனஉளைச்சளாகும் பலரும் பயனடைவார்கள் எனலாம். இதேபோல மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT