Advertisment

மருந்தின்றி தவிக்கும் வீட்டில் சிகிச்சைபெறும் கரோனா தொற்றாளர்கள்  -தேனி மாவட்ட அதிகாரிகளின் மெத்தனப்போக்கு!  

Corona infected people being treated at home without medicine - Theni district officials' complacency!

தேனியில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம், போடி, ஆண் டிபட்டி, கம்பம், சின்னமனூர் உள்பட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் முகாம்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

Advertisment

இப்படிகரோனாவால்பாதிக்கப்பட்டமக்களுக்கு மருந்து மாத்திரைகளைக்கூட சரிவர வழங்குவது இல்லை. அதிலேயும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடுகளை வாங்கி கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு மருத்துவமனைகளில்செய்யக்கூடிய சாப்பாடுகளையே அந்த மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகளுக்கு கூட மருத்துவமனையில் சமைக்கும் சாப்பாட்டைதான் கொடுத்து வருகிறார்கள்.அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டு சிகிச்சையில் இருந்து கொள்கிறோம் என்று கூறி விட்டுச் செல்கிறார்கள்.அப்படி செல்லக்கூடிய மக்களுக்கு உங்கள் பகுதியிலேயே இருக்கக்கூடிய சுகாதார அலுவலர்கள் வந்து மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். நீங்கள் தனிமையில் இருந்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

Advertisment

அதன்மூலம் மாவட்டத்தில் 5000 பேர் வரை வீட்டு சிகிச்சையில் இருந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்க அந்தந்த பகுதி சுகாதார அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதை எல்லாம் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உட்பட சுகாதாரதுறை அதிகாரிகளிடம் மூடி மறைத்துவிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். அப்படி இருந்தும் கூட கரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் சரிவர ஆர்வம் காட்டவில்லை என்று பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் வெளிப்படையாக சுட்டிக்காட்டினார்.

Corona infected people being treated at home without medicine - Theni district officials' complacency!

ஆனால் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், ''தடுப்பு பணியில் அரசு சிறப்பாக செயல்படுகிறது'' என்று கூறினார்.அதனாலோ என்னவோ சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசும் போதுகூட, ''பலமுறை துணை முதல்வர் ஓபிஎஸ்...ஓபிஎஸ் என்று தான் பேசினாரே தவிர கடைசியில்தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்று கூறினார். கடந்தாண்டு கரோனா முதல் அலை வந்த போது இதே அதிகாரிகள் தான் பணியில் இருந்தனர். அப்போது இந்த அளவுக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லை.வீடுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகளுடன் பழங்களையும் வீடு தேடி கொடுத் தனர். அந்த அளவுக்கு ஓபிஎஸ்க்கு விசுவாசமாக இருக்கக்கூடிய மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி மற்றும் ஒபிஎஸ் உறவினர்களான மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் இளங் கோவன், சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியான ராகவன் உள்பட சில அதிகாரிகள் இருந்தனர்.தற்பொழுது அதே அதிகாரிகள்தான் தொடர்ந்தும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது கரோனா தடுப்பு பணியில் ஆர்வம் காட்டாமல் அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெயர் அளவில் செயல்பட்டுக் கொண்டு ஓபிஎஸ்க்கு விசுவாசமாக இருந்து வருகிறார்கள்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் மருந்து மாத்திரைகள் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டும் உயிருக்கும் போராடியும் வருகிறார்கள். அதுபோல நான் நாளுக்கு நாள் கரோனா தொற்றும் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்படி இருந்தும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி உட்பட பல அதிகாரிகள் மெத்தன போக்கையே கடைபிடித்து வருகிறார்கள்.

coronavirus Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe