Vaccinated corona? - District Superintendent of Police at the hospital

Advertisment

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி வகித்துவரும் முனைவர்பா. மூர்த்திக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று (25.08.2021) உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் நடைபெற்ற காவலர் தகுதி தேர்வு மற்றும் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.