'' Corona increases even after school and college holidays '' - Interview with Health Secretary Radhakrishnan!

Advertisment

தமிழகத்தில் சில நாட்களாகவேகரோனாபாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சையில் 16 பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 250க்கும்மேற்பட்டோருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று சென்னை கிண்டி மத்திய தொழிற் பயிற்சி மையத்தில் 54 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கரோனா பாதித்தவர்கள் நேரடியாக மருத்துவமனையில் வந்து சேர்வதால் தரம் பிரிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும்கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. மதம், கலாச்சாரம், அரசியல் கூட்டங்களால்கரோனாபரவல் அதிகரித்து வருகிறது'' என்றார்.