Corona increase in Chennai - Commissioner Prakash information!

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கரோனாஎன்பது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும்கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1000-ஐ நெருங்கும் வகையில்945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் 395 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 107 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் சராசரியாக 350க்கும் மேல் கரோனா பாதிப்பு இருப்பதால், கரோனாதடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.