கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த பெண் ஒருவர், கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டு, பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை புதுநடுவலூர் கிராமம் மலையடிவாரத்தில் அதிகாரிகள் அடக்கம் செய்ய சென்றபோது, அப்பகுதி கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புதெரிவித்தனர். பின்னர் பொதுமக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும்உடன்பாடு ஏற்படாததால், திருச்சியில் எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.