Advertisment

கரோனாவால் இறந்தவரின் உடல் உறுப்பு திருட்டு...?? பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

corona incident in pattukottai

தமிழகத்தில் கரோனாபாதிப்புநாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தஞ்சையில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக உறவினர்கள் புகார் எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி காலைஅவர் உயிரிழந்ததாக உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தது மருத்துவமனை நிர்வாகம்.

Advertisment

அதனையடுத்து, ஜூலை 29 ஆம் தேதி மாலை அவரது உடல், சட்ட விதிமுறைகளின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசல் பின்புறம் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. ஆனால், இறந்தவரின் உடலிலிருந்து உடலுறுப்புகள் திருடப்பட்டு இருக்கலாம் என இறந்தவரின் உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

காலையிலேயே உயிரிழந்தவரின் உடலை, மாலை வரை காலம் தாழ்த்தி கொடுத்ததற்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பிய உறவினர்கள், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

Ad

இந்நிலையில் இன்றைய தினம் சார் ஆட்சியர், கோட்டாட்சியர், மருத்துவர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.கரோனாவால் உயிரிழந்தவரின்உடலில் இருந்து உடல் உறுப்புகள்திருடப்பட்டிருப்பதாகசர்ச்சை எழுந்திருப்பது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

hospital pattukottai Thanjai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe