Advertisment

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு...

corona incident mayiladurai

கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை ஊர் பொது சுடுகாட்டில் புதைக்கவிடாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் அவலம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு கணபதி நகரை சேர்ந்தவர்கரோனா எனும் கொடிய நோயால் பாதிப்புக்குள்ளாகி, மயிலாடுதுறை மருத்துவமனையிலும், பிறகு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

Advertisment

அவரது உடலை சித்தர்காட்டில் காவிரிக்கரையில் உள்ள சுடுகாட்டில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறையினர், மயிலாடுதுறை போலீசார் பாதுகாப்புடன் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் புதைப்பதற்காக கொண்டு வந்தனர்.

அதனை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூடிவிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர். ஆனாலும் தங்களது எதிர்ப்பை மீறி உடலை புதைத்ததாக காவல்துறையினரையும், அதிகாரிகளையும் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா காலத்தில் மனித நேயம் செத்துவிட்டது என்பதற்கான உதாரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.

corona virus Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe