Skip to main content

கணவனை பிரித்த கரோனா...! குழந்தைகளோடு தற்கொலை செய்த மனைவி!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Corona incident in erode

 

கணவன், மனைவி மகள், மகன் என இரு குழந்தைகளுடன் அந்த குடும்பம் சந்தோஷமாகத் தான் வாழ்ந்தது.  ஈவு இரக்கமற்ற வகையில் மனித உறவுகளை பிரிக்கும் கொடூர கரோனா அக்குடும்பத்தில் புகுந்தது குடும்ப தலைவனான கணவனை காவு வாங்கியது. உறவின் பிரிவை தாங்க இயலாத மனைவி தனது குழந்தைகளோடு உலகத்தை விட்டு நிரந்தரமாக சென்று விட்ட சோகம் உறவுகளை தாண்டி அங்கு வாழும் மக்களை கதற வைத்துள்ளது. 

 

ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் பார்த்தசாரதி. இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும் நித்தியா, ரம்யா என்ற இரு மகள்களும் உள்ளனர். அனைவருக்குமே  திருமணமாகிவிட்டது. மகன் ஹரிஹரன் மஸ்கட்டில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். மூத்த மகள் நித்யாவை சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சென்ற 15 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து வைத்தார். பாஸ்கர் சென்னையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். கணவன் மனைவி இருவரும் அன்போடு வாழ்ந்தனர்.

 

அவர்களுக்கு 11 வயதில் மகதி என்ற மகளும், 6 வயதில் யாதவ்கிருஷ்ணன் என்ற மகன் மகதி சென்னை மாங்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பும் யாதவ் கிருஷ்ணன் அதே பள்ளியில் 1-ம்  வகுப்பு படித்து வந்தனர். பாசப்பினைப்புடன் நல்லபடியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில்  கரோனா வைரஸ்  என்ற கொடுங்கோலன் உட்புகுந்தான். 

 

சென்ற மாதம் 2 - தேதி கணவர் பாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ போராட்டம் எவ்வளவோ நடந்தும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் சென்ற 9-ந் தேதி பரிதாபமாக இறந்து விட்டார். கணவர் இறந்தது போய்விட்டார். தங்களை விட்டு பிரிந்து போய் விட்டாரே என உறவின் பிரிவு மனைவி நித்யாவுக்கு மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியது. இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது  ஞாபகத்திலேயே  இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் சென்னையில் குழந்தைகளுடன் தனியாக இருக்க முடியாமல் ஆறுதலுக்காக  நித்யா தனது மகன், மகளுடன் ஈரோடு திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் தொடர்ந்து அறுதல் கூறி வந்தனர். ஆனாலும் அந்த பெண்னின் இளகிய மனம்  கணவர்  பிரிவைத் தாங்க முடியாமல் தவித்தது. உளவியல் ரீதியாக மன வலிமையை இழந்து வாழ்க்கையை வெறுத்தார். அதன் விளைவு தற்கொலை என்ற முடிவெடுத்தார்.

 

பிஞ்சு இதயங்களான குழந்தைகளையும் தன்னோடு கொண்டு செல்வது என்ற கொடூரத்தையும் செயல்படுத்தினார். 24 ந் தேதி மதியம் உணவில்  விஷ மாத்திரையை கலந்து பெற்றெடுத்த செல்வங்களான மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கலந்து கொடுத்தார். அம்மா கொடுத்த விஷ உணவை தாய் பாசத்துடன் இரு குழந்தைகளும் சாப்பிட்டது. பிறகு தாய் நித்யாவும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டார். பின்னர் வீட்டில் உள்ள அறைக்கு  குழந்தைகளை அழைத்து சென்று படுக்க வைத்து ''சாமி நாம மூனு பேரும் இப்ப அப்பா இருக்கிற இடத்துக்கு கொஞ்ச நேரத்துல போயிடுவோம்...'' என கதறி அழுதுள்ளார். 

 

சிறிது நேரத்தில் அந்த அறையில் அமைதி நிலவியது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் நித்யாவின் வயதான தந்தை பார்த்தசாரதி கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் பதைபதைத்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் அங்கு மயங்கி கிடந்தனர். அந்த அறையில் விஷம் மாத்திரைகள்  கிடந்தது.

 

அதிர்ச்சியடைந்து கதறிய அவர்  மகள், பேரன் ,பேத்தி மூவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு  தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் கொடுக்காமல் ஒன்றன் பின் ஒருவராக தாய் நித்யா, குழந்தைகள் மகதி, யாதவ் கிருஷ்ணன்  ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். 

 

அந்த மூவர் உடலையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது தாங்கவொன்னா துயரத்தை ஏற்படுத்தியது.

 

அன்பு மயமான ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை முழுமையாக விழுங்கியது. கொலைகார கரோனா...!

 

 

 

சார்ந்த செய்திகள்