சென்னை அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியில் இருந்த பெண்ணுக்கு கரோனா!!!

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் பெரிய அளவில் உள்ளது. இன்று புதிதாக 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் மொத்த கரோனா பாதிப்பு 1,520 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மக்களைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Corona impact woman working in chennai Government Hospital

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தூய்மைப் பணியில் இருந்த பெண்ணுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினரில் 3 வயது குழந்தை உட்பட 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதியான 5 பேரும் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai corona virus covid 19 hospital rajivganthi
இதையும் படியுங்கள்
Subscribe