Published on 18/05/2020 | Edited on 18/05/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் போதிலும் தமிழகத்கதில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த, 5 ஆம் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார். மேலும், டிஎன்பிஎல் போட்டிகளுக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.