தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 161பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 161 பேரில்சென்னையில், ஒரேநாளில் அதிகபட்சமாக 138 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றும், நேற்று முன்தினமும் இதேபோல் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், தற்போது இன்றும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138 என்ற அளவில் உள்ளது. இதனால் சென்னையில் மொத்தமாக 906 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு,மதுரையில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரத்தில் தலா 3 பேருக்கும்கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக தொடர்கிறது.நேற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இதுவரை மொத்தமாக 1,258 பேர் கரோனாவிலிருந்துகுணமடைந்துள்ளனர். தற்பொழுதுவரை1,035 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக இருந்த நிலையில், இன்று 138பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக சென்னையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100-ஐ கடந்திருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.