
தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் இன்று 962 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 200க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 27,05,489 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,078 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,58,632 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,176 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,14,631 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 5,15,09,014 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 11,012 பேர் சிகிச்சையில் உள்ளனர்.