Advertisment

கரோனா ஹாட் ஸ்பாட்டான சென்னை ஐ.ஐ.டி?

 Corona Hotspot Chennai IIT?

சென்னையில் ஐ.ஐ.டியில்ஒரே நாளில், 33 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை ஐ.ஐ.டி கரோனா 'ஹாட்ஸ்பாட்'டாக மாறிவிட்டதாக மாணவர்கள் மத்தியில்அச்சம் நிலவிவருகிறது.

Advertisment

சென்னை ஐ.ஐ.டி.யில் 9 மாணவர்கள் விடுதிகள்,ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது. விடுதிகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.சென்றவாரம் வரை ஐ.ஐ.டியில் மட்டும் 66 மாணவர்கள் உட்பட, 71பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில், 33 பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அங்கு மொத்தமாகக் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு வாரத்தில்104 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதனால், ஐ.ஐ.டிவளாகம் கரோனாஹாட்ஸ்பாட்டாக மாறிவருகிறதோ என்ற அச்சம் அங்கு நிலவி வருகிறது. கரோனாபாதிப்பு காரணமாகஅடுத்த அறிவிப்பு வரும்வரைஅனைத்துத்துறை மையங்கள்,விடுதிகள்மூடப்படுவதாக ஐ.ஐ.டி நிர்வாகம் சார்பில்அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் முடிந்த அளவு வீட்டில் இருந்தேஆன்லைனில் பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும்கூறப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா பாதிப்பின் ஆரம்பத்தில் சென்னைகோயம்பேடு மார்க்கெட்கரோனா ஹாட்ஸ்பாட்டாகக் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கையாகப் பல மாதங்கள்மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

corona virus chennai IIT STUDENT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe