Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் கரோனா நோயளிகளுக்காக 750 படுக்கைகள் உள்ளன. மேலும்வெண்டிலேட்டர்களுடன் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு, நவின மருத்துவ பரிசோதனை கருவிகள், யோக மையம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உள்ள இந்த மருத்துவமனையை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்றைய தினம் (07.07.2020) திறந்து வைத்தார்.