/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsds_31.jpg)
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில்30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,645 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 41,357 பேர் குணமடைந்துள்ளனர்.அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 957 ஆக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)