Corona has been confirmed for the Ranipettai DMK MLA

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கரோனாபாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

நேற்று கடலூர் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கரோனாஉறுதியானது. தற்பொழுது அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.இந்நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.திமுக எம்.எல்.ஏக்கள் செங்க்கூட்டுவன், கார்த்திகேயனுக்கு இன்று கரோனாசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ ஆர். காந்திக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment