ADVERTISEMENT

இரண்டாம் தவணை கரோனா நிதியுதவி; நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர்!

04:43 PM Jun 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே தமிழகத்தில் கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்படுமென அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் தவணை நிதியுதவி திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாயுடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT