style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 206 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்னிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்படுவதோடு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சென்னை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக புதிதாக 200 மருந்து தெளிக்கும் இயந்திரத்துடன் பணியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். சென்னை மாநாகராட்சி அலுவலகத்தில் இருந்து இன்று காலையில் 200 பணியாளர்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை துவங்கினர். அங்கிருந்து தெளிப்பான்கள் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்ட்டனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/02_37.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/01_37.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/04_37.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/03_36.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/05_34.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/06_32.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/07_27.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/08_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/09_17.jpg)