கோகுல இந்திராவுக்கு கரோனா!

h

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe