ஈரோட்டில் 37 நாட்களுக்கு பிறகு ஒருவருக்குகரோனாதொற்று உறுதியாகியுள்ளது.கடந்த 37நாட்களாக கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு இருந்து வந்தது. இந்நிலையில் 37 நாட்களுக்குபிறகு ஈரோட்டில் ஒருவருக்குகரோனாதொற்றுஇன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மார்ச் மாதம் தாய்லாந்தை சேர்ந்த இருவருக்குஈரோட்டில் கரோனா உறுதியானதை அடுத்து அங்கு நாளுக்கு நாள் கரோனாபாதிப்புஎண்ணிக்கை அதிகரித்து வந்தது.
அதன் பிறகு பல்வேறு கட்டங்களாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த 37 நாட்களாக ஈரோட்டில் கரோனாபாதிக்கப்பட்டவர் இல்லை என்ற நிலை தொடர்ந்து வந்தது நிலையில், ஈரோட்டில் கவுந்தப்பாடி சேர்ந்த ஒருவர் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில்,மருத்துவமனைக்கு சென்ற அவருக்குகரோனாபரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டது.