ADVERTISEMENT

கரோனா - சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தஞ்சையில் வெளிமாநிலத்தவர்கள் தவிப்பு

06:52 PM Apr 02, 2020 | kalaimohan

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கும், சரபோஜி கல்லூரிக்கும் அருகில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இது நகைக் கடை என்றும் ஜவுளிக்கடை என்றும் பேசப்பட்டுவந்தது. தற்போது இது மருத்துவமனை என்றும் அதுவும் தஞ்சையில் இதுவரை இல்லாத வகையில் பல்நோக்கு மருத்துவமனையாக அமைய இருக்கிறது என்றும் பரவலாக பேசப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் கட்டுமான பணிகளை சேலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

ADVERTISEMENT


கட்டிட வேலைக்காக வெளிமாநிலங்களிலிருந்து கூலியாட்கள் வரவழைக்கப்பட்டு வேலைகள் மிக வேகமாக நடந்து வந்தநிலையில், கரோனா வைரஸ் விவகாரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்த்துவரும் வெளிமாநிலத்தவர்களோ சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் இருக்கின்றனர், சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் மன்றாடினாலும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்.

பதிலுக்கு "கரோனா வைரஸ் விரைவில் சரியாகிவிடும், இந்த வேலையை நாங்கள் ஒரு மாதத்திற்குள் முடித்து கொடுக்கணும். அதனால நீங்க இங்கே தான் இருக்கணும், நீங்க போனால் திரும்பி வரமாட்டீங்க, உங்களை போல இங்கு எங்களால் ஆட்களை தேடமுடியாது" என்று அவர்களை அங்கேயே வைத்திருக்கிறார்களாம்.

நோய் தொற்று வந்துவிடுமோ என நினைத்து மிகுந்த வேதனைக்கு உள்ளாகிவரும் வெளிமாநிலத்தவர்களின் கவலையை அறிந்த சில அமைப்புகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்களை உடனே அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கையை மாவட்ட அதிகாரிகளிடம் முன் வைத்திருக்கின்றனர்.

சமுக ஆர்வளர்களின் தொடர் அழுத்தத்தினால் வேறு வழியின்றி அங்கு தங்கியிருக்கும் நபர்களின் பெயர், ஊர் விலாசம் உள்ளிட்டவற்றை எடுத்து முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்களாம் அதிகாரிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT