கூடலுார் நகராட்சியில் மகளிர் குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலுார் நகராட்சியில் ‛கரோனா’தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் குப்பையை அகற்றுவது, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களை தூய்மைப்படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

Advertisment

 Corona echo ... go house to house and study by women's group!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில், கூடலுார் நகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 10- க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர், அமைப்பாளர் கிருஷ்ணவேணி தலைமையில் பெண்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisment

அப்போது வீடுகளில் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக பதிவு செய்து கொள்கின்றனர். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் விவரங்களையும் குறித்து வைக்கின்றனர். இது குறித்த அறிக்கையை நகராட்சி மூலம் சுகாதாரத்துறைக்கு வழங்க உள்ளனர்.

சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட வீடுகளுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான செயலில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையிலும், கெரோனா அச்சம் நிலவி வந்த போதிலும் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் தைரியமாக செயலில் இறங்கி செய்யும், இந்த பணிக்கு மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.