Advertisment

கோழிமுட்டைகளில் கரோனா படம்!!! அசத்தும் ஓவிய ஆசிரியர்! (படங்கள்)

கரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டபணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையை சேர்ந்த ஓவியர் ஒருவர் கோழி முட்டைகளில் ஓவியங்களை வரைந்துள்ளார்

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்தை தாண்டியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். அவர்களுக்காக, சென்னையைச்சேர்ந்த ஜோயல் பெர்ட்டிசியன் என்பவர் 100க்கும் மேற்பட்ட கோழி முட்டைகளில் ஓவியங்கள் வரைந்து அவற்றின்மூலம் தனது நன்றியை தெரிவித்தார். மேலும், கடந்த 14 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணிபுரியும் அவர் முட்டைகள் மட்டும் அல்லாமல் மின்விளக்கு உள்ளிட்ட பொருட்களின் மீதும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

Painting corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe