“நீ வருவாயென...” காத்திருக்கும் கரோனா பொம்மை! (படங்கள்)

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் மே 03- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் அவ்வப்போது வெளியே வருகின்றனர். அவ்வாறு ஊரடங்கை மீறி வெளியே வருவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, மூலக் கொத்தளம் பிரதான சாலை மற்றும் மாதாவரம்பகுதிகளில் காவல்துறை சார்பில் “காத்திருக்கிறேன், நீ வருவாயென...” என்று கூறி அச்சுறுத்துவது போல் கரோனா உருவ பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Subscribe