Corona for doctor and wife - 15 people in general

Advertisment

பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கும் கரோனாவின் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் லட்சத்தை நெருங்கி வருகிறது.குமரிமாவட்டத்தில் மட்டும்310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டில் 9,039 போ் தனிமைபடுத்தபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் குமரிமாவட்டத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டம் முமுவதும் வேகமாக கரோனா பரவி வருகிறது. இதில் தக்கலையில் பிரபல தனியார்மருத்துவமனை மருத்துவர்ஒருவருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் தக்கலையில் உள்ள அவருடைய மருத்துவமனையையும் சுகாதார துறையினா் பூட்டி சீல் வைத்தனா். இந்த நிலையில் மருத்துவருடைய மனைவிக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில்கடந்த 14 நாட்களாக மருத்துவ சிகிச்சைக்கு சென்றவா்களின் பெயா் சேகாிக்கப்பட்டது. அதில் அந்த பகுதியை சோ்ந்த 15 ஊர்மக்களின் பெயா் உள்ளது. இதனால் அந்த ஊர்மக்கள் அதிா்ச்சியும் பதட்டமும் அடைந்துள்ளனர்.

Advertisment

மேலும் மருத்துவமனையில் வேலை பாா்த்த நர்ஸ் மற்றும் ஊழியா்கள் தனிமைபடுத்தபட்டதோடு அவா்களின் உறவினா்களையும் பாிசோதனை செய்வதுடன் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகளிடமும் பாிசோதனை நடத்துகின்றனர்.