Corona curfew ... Chennai Police has released a phone number for emergencies !!

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் அவசரத் தேவைகளுக்காக காவல் துறையைத் தொடர்பு கொள்ள அவசர அழைப்பு எண்களை சென்னைக் காவல்துறை அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவைகளுக்காக 24 மணி நேர (94981 81236, 94981 81239)தொலைப்பேசி எண்களை சென்னைக் காவல்துறை அறிவித்துள்ளது. அத்தியாவசிப் பொருட்கள், ரெம்டிசிவிர் மருந்துக்கு போக்குவரத்துத் தடை ஏற்பட்டால் காவல்துறையை அழைக்கலாம். தடையற்ற ஆக்சிஜன் டேங்கர் போக்குவரத்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போக்குவரத்து தொடர்பாகவும் அழைக்கலாம். அதேபோல் தனியாக வசிக்கும் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால் இந்த எண்களை அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisment