தமிழகத்தில் இன்றுகரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை798 ஆகஉள்ளது. தற்போதுவரைதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் ஒரேநாளில் 538 பேருக்குஇன்று கரோனாபாதிப்பு உறுதிசெய்யபட்டதால், சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் ஒரே நாளில் 97 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் செங்கல்பட்டில் ஒரே நாளில் 90 பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 6 பேர் உயிரிழந்ததால், கரோனாஉயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 5 பேர், கன்னியாகுமரியில் ஒருவர் என ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் ஒரே நாளில் 92 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை2,051 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 5,895 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.