Corona crosses 40 thousand in Tamil Nadu

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,982 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 13-வது நாளாக தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதுஎன்ற நிலையில் தொடர்கிறது. மேலும்தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பத்தாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இதுவரை சென்னையில் 28,924 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாகசென்னையில் கரோனாவால்இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 22,047 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில்1,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரேநாளில்தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரைகரோனாவால் 367 பேர்உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில்ஒரே நாளில் 128 பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment