தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அண்மையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்குகரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமானபிரேமலதா விஜயகாந்திற்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்தியாளர்களைச் சந்தித்தபிரேமலதா விஜயகாந்த்,குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கரோனாஇல்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.