விழுப்புரத்தில் கரோனாஉறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நபரை காணவில்லை என மருத்துவர்கள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த நபரைகாணவில்லை என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த அந்த இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த இளைஞர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரை காணவில்லை என காவல்துறையிடம் மருத்துவர்கள் தரப்பு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.