Advertisment

சிகிச்சையில் இருக்கும்  அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கரோனா உறுதி!

 Corona confirms Minister Durakkannu who is in treatment!

கடந்த 13- ஆம் தேதி முதல்வரின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கடந்த 14- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

Advertisment

corona virus minister duraikannu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe