கனடாவில் திருச்சி திரும்பிய 3 பேருக்கு கரோனா உறுதி!

Corona confirms 3 people who returned to Trichy in Canada!

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ள நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், ராமலிங்க நகரைச் சேர்ந்த 3 பேர் கனடா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.

பின்னர் கும்பகோணத்தில் உள்ள உறவினரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பிறகு திருச்சி வந்த அவர்கள், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கி இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் குழந்தை உள்பட 3 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனினும், அவர்களுக்கு லேசான அறிகுறியே இருப்பதாக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

கரோனா உறுதியானவர்கள் அனைவரும் ராமலிங்க நகரில் உள்ள உறவினரின் இல்லத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Canada coronavirus trichy
இதையும் படியுங்கள்
Subscribe