தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரம் குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் அனைத்தும் இயங்கிவருகிறது. இந்நிலையில், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றிவரும் கண்ணன் (55) என்பவருக்கு கடந்த சில நாட்களாக கரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் (16.10.2021) பரிசோதனை செய்துகொண்டார்.
அப்போது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தக் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகே அந்தக் காவல் நிலையத்தில் எத்தனை நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளது என்பது உறுதியாகும்.