Corona confirmed to former minister Vijayabaskar

Advertisment

இந்தியா முழுவதும் கரோனாவின் 2வது அலையின் பரவல் அதிகமாகியுள்ளது. தமிழகத்திலும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாகஇருப்பதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி வருகிறது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும்விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதில் கூறியதாவது, கரோனா தொற்று உறுதியானதும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும்அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்என கேட்டுக்கொண்டுள்ளார்.