Corona - close to 3 thousand in a single day - a total impact of over 62 thousand

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2,710பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகள்படி, 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் கரோனாஉறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை42,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,652 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisment

தற்போது மருத்துவமனைகளில் 27,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 ஆவது நாளாக சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ஒரே நாளில் 157 பேருக்குஉறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஒரே நாளில் 139 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 1,358பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 34,112 பேர் மொத்தமாககுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.